சுடச்சுட

  

  திருத்துறைப்பூண்டியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 லாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

  திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் வி. ராஜகோபால் தலைமையிலான வருவாய்த் துறை அலுவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். மன்னார்குடி சாலையில் வந்த 2 லாரிகளை நிறுத்தி சோதனையிட்டபோது, அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

  விசாரணையில் லாரிகள் தஞ்சை மாவட்டம், திருவையாறை சேர்ந்த வள்ளல்பாரி, அரியலூர் மாவட்டம் திருமழப்பாடி சங்கர் ஆகியோருக்கு சொந்தமானது என தெரிய வந்தது.

  இதையடுத்து, 2 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டு, போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai