சுடச்சுட

  

  திருவாரூரில் சனிக்கிழமை உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் 1864 பேருக்கு உதவித் தொகைகளை மாநில உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் வழங்கினார்.

  ஆட்சியரகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் கல்வி உதவித்தொகை, திருமண உதவித் தொகை, இயற்கை மரணம் மற்றும் ஈமச் சடங்கு உதவித் தொகை என 1864 பயனாளிகளுக்கு உதவித் தொகைகளை வழங்கி அமைச்சர் பேசியது:

  திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 47,231 பயனாளிகளுக்கு ரூ. 27.27 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. பயனாளிகள் திட்டப் பயனை சரியாக பயன்படுத்திக் கொண்டு முன்னேற்றம் காண வேண்டும் என்றார் காமராஜ்.

  நிகழ்ச்சியில் ஆட்சியர் எம். மதிவாணன், மாவட்ட வருவாய் அலுவலர் பு. மணிமாறன், மாவட்ட ஊராட்சித் தலைவர் ஜெயலட்சுமிஅம்பிகாபதி, நகராட்சித் தலைவர் வே. ரவிச்சந்திரன், ஒன்றியத் தலைவர் மலர்மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai