சுடச்சுட

  

  திருவாரூர் அருகே சனிக்கிழமை மின்சாரம் பாய்ந்து உணவக உரிமையாளர் உயிரிழந்தார்.

  திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உணவகம் நடத்தி வந்தவர் கோவிந்தராஜ் 40). சனிக்கிழமை இவர் உணவகத்தின் மாடியில் காயப் போடப்பட்டிருந்த துணிகளை எடுப்பதற்காக சென்றார்.

  அப்போது ஒரு துணியை இரும்பு துண்டு கட்டிய கம்பால் எடுக்க முயன்றுள்ளார்.

  அப்போது கம்பில் கட்டப்பட்டிருந்த இரும்பு மேலே சென்ற மின் கம்பியில் உரசியதை அடுத்து கோவிந்தராஜ் உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

  இதுகுறித்து திருவாரூர் தாலுகா காவல் நிலையப் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai