சுடச்சுட

    

    திருவாரூரில் கார் மரத்தில் மோதியதில் ஓய்வுபெற்ற துணை ஆட்சியர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். 3 பேர் பலத்த காயமடைந்தனர்.

    திருவாரூர் பாத்திமா சார்ச்சில் பங்குத் தந்தையாக இருப்பவார் சுந்தார்ராஜ் (65). இவார் தஞ்சையில் நடந்த திருச்சபை கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு, காரில் திருவாரூருக்கு நண்பர்கள் திருவண்ணாமலையைச் சேர்ந்த பங்குத் தந்தை மேரிஜான் (65), திருவாரூர் ஜிஆர்டி நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற துணை ஆட்சியர் சுந்தார்ராஜ் (70) ஆகியோருடன் வந்துள்ளார். காரை திருவாரூர் அருள்நகரைச் சேர்ந்த அருமைச்செல்வன் (60) ஓட்டினார்.

    திருவாரூர் கல்பாலம் அருகே கார் வந்தபோது, முன் டயார் திடீரென வெடித்தது. இதில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியது. இதில், காரில் பயணம் செய்த 4 பேரும் பலத்த காயமடைந்தனார். இவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் ஓய்வுபெற்ற துணை ஆட்சியர் சுந்தார்ராஜ் உயிரிழந்தார். மற்ற மூவரும் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்து திருவாரூர் நகரக் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai