Enable Javscript for better performance
திருவாரூர்: ரூ. 2,700 கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டத்தில் 2015-2016-ம் நிதியாண்டில் ரூ. 2,700 கோடி வங்கிக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.

    திருவாரூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வங்கியாளர்கள் கூட்டத்தில் கடன் அறிக்கையை வெளியிட்டு மேலும் அவர் பேசியது: விவசாயத்துக்காக ரூ. 2,390 கோடி, சிறு குறு தொழில்களுக்கு ரூ. 62.50 கோடி, மற்றவை மூலம் ரூ. 86.50 கோடி என மொத்தம் ரூ. 2,700 கோடி வங்கிகள் மூலம் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்த இலக்கு கடந்த ஆண்டைவிட ரூ. 450 கோடி கூடுதலாகும். நிகழாண்டு கடன் இலக்கை அடைய வங்கியாளர்கள் ஒத்துழைக்க வேண்டும். தொழில் சார்ந்த வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் வகையில் கடன் வழங்க வேண்டும். திருவாரூர் மாவட்டம் விவசாயம் சார்ந்த மாவட்டமாக இருப்பதால், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் மேம்பாடு அடைய காலம்தாழ்த்தாமல் கடன் வழங்க வேண்டும் என்றார் ஆட்சியர்.

    கூட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதுநிலை மண்டல மேலாளர் பாலமுரளி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சத்தியநாராயணன், ரிசர்வ் வங்கி உதவிப் பொது மேலாளர் ரவிக்குமார், இணை இயக்குநர் வேளாண்மை க. மயில்வாகணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai