சுடச்சுட

  

  திருவாரூர் விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

  By DN  |   Published on : 01st April 2015 02:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூர் மத்திய பல்கலைக்கழகக் கட்டுமானம் விழுந்து உயிரிழந்தவர்களின் சடலம் உறவினர்களிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

  பல்கலைக்கழகக் குடியிருப்பு வளாகப் பகுதியில் கட்டப்பட்ட விருந்தினர் மாளிகை முகப்பு வளைவு கடந்த ஞாயிற்றுக்கிழமை சரிந்து விழுந்ததில் மயிலாடுதுறை காலனி தெரு சின்னசாமி (29), பட்டவர்த்தி மண்ணிபள்ளி குமார் (27), ஒடிசாவைச் சேர்ந்த ஷமீர்குமார்ஷெட்டி (26), கிட்டு என்ற பொதியா (30), உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ராம்சுபாஜ் (18) ஆகிய 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

  அவர்களின் சடலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிந்த ஒடிசா ஷமீர்குமார்ஷெட்டி, கிட்டு, உத்தரபிரதேசம் ராம்சுபாஜ் ஆகியோரது சடலம் ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு திங்கள்கிழமை அதிகாலை கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து அந்தந்த மாநிலங்களுக்கு ரயில் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது. அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் மூவரின் சடலங்களையும் செவ்வாய்க்கிழமை மதியம் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

  இதற்கிடையே, உயிரிழந்த சின்னசாமி, குமார் ஆகியோரின் உறவினர்கள் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம், வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்கக் கோரி, சடலத்தை வாங்க மறுத்து மறியலில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்குப் பிறகு சடலங்களை திங்கள்கிழமை பெற்றுச் சென்றனர்.

  தொழிலாளர்களின் நிலை?: திருவாரூர் மத்திய பல்கலைக்கழகக் கட்டுமானப் பணிகள் அனைத்தும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. விபத்து நேரிட்ட இடத்தின் அருகே குடிசைகளில் தங்கியுள்ள பிகார், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சகத் தொழிலாளர்களை இழந்த சோகத்திலும், மீண்டும் வேலை எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பிலும் இருந்து வருகின்றனர். வேலை தொடங்கும் வரை அவர்களுக்கு வாழ்க்கைச் செலவுக்கான இடைக்கால நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai