சுடச்சுட

    

    ரிஷியூர் வீடு இடிப்பு வழக்கு: ஜூன் 2-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

    By DN  |   Published on : 01st April 2015 01:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகேயுள்ள ரிஷியூர் வீடு இடிப்பு தொடர்பான வழக்கை வரும் ஜூன் மாதம் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீடாமங்கலம் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

    ரிஷியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முன்னாள் ஊராட்சித் தலைவர் சோம. தமிழார்வன். இவரது கார் ஓட்டுநர் பாலசுப்பிரமணியனின் மனைவி கஸ்தூரி. இவருக்குச் சொந்தமான வீடு கடந்த 2011, நவம்பர் 28-ம் தேதி இடிக்கப்பட்டது.

    இதுகுறித்து, நீடாமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மன்னார்குடி திவாகரன், ரிஷியூர் ஊராட்சித் தலைவர் கிருஷ்ணமேனன், தமிழ்ச்செல்வன், ராஜேந்திரன் உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர். பிறகு அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

    இந்த வழக்கு நீடாமங்கலம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது, பொக்லைன் எந்திர உரிமையாளர் வீரசிவசங்கர், ஓட்டுநர் சக்தி ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். திவாகரன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. மற்ற 6 பேரும் உயர்நீதிமன்ற ஆணைப்படி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

    வழக்கை விசாரித்த நீதிபதி பெ. முருகன் வழக்கு விசாரணையை வரும் ஜூன் மாதம் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai