சுடச்சுட

  

  திருவாரூர் ஆழித்தேர் கட்டுமானப் பணி 90% நிறைவு

  By திருவாரூர்  |   Published on : 02nd April 2015 01:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் புதிய ஆழித்தேரின் கட்டுமானப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன என்றார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.

  திருவாரூர் ஆழித்தேரோட்டம் கடந்த 16.7.2010-ம் ஆண்டு நடைபெற்றது. அதன்பிறகு ஆழித்தேரை புதுப்பிக்க முடிவெடுத்து 2.8.2010 அன்று தேர் பிரிக்கும் பணி தொடங்கி, பிறகு கிடப்பில் போடப்பட்டு, நீண்ட நாள்களுக்குப் பிறகு தேர்க் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

  இந்நிலையில், புதன்கிழமை தேரடியில் ரூ. 2.17 கோடியில் நடைபெறும் புதிய ஆழித் தேர் பணியை மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் பார்வையிட்டார்.

  அப்போது 90 சதவீதம் தேர்க் கட்டும் பணி நிறைவடைந்துள்ளது.

  மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க ஊழியர்களிடம் அறிவுருத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.

  ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் த. மோகன்ராஜ், உதவி ஆணையர் சிவராம்குமார், கோட்டாட்சியர் முத்துமீனாட்சி, செயல் அலுவலர் பாரதிராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

   

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai