சுடச்சுட

    

    தம்பியை கத்தியால் குத்திய அண்ணன் கைது

    By திருத்துறைப்பூண்டி  |   Published on : 03rd April 2015 04:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே சொத்துத் தகராறில் தம்பியை கத்தியால் குத்திய அண்ணனை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

    எடையூரைச் சேர்ந்த விவசாயி கோவிந்தராஜ். இவரது மகன்கள் சாமிநாதன் (46), ஆறுமுகம் (44). இவர்கள் இருவருக்கும் சொத்துத் தகராறு உள்ளதாம்.

    செவ்வாய்க்கிழமை ஆறுமுகம் தனது நண்பர் ராஜமாணிக்கத்தின் டைலர் கடையில் பேசிக்கொண்டிருந்தாராம். அங்கு வந்த சாமிநாதனுக்கும், ஆறுமுகத்துக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் ஆத்திரமடைந்த சாமிநாதன், கத்தியால் ஆறுமுகத்தை குத்தினாராம். ஆறுமுகம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து எடையூர் போலீஸார் வழக்குப் பதிந்து சாமிநாதனை கைது செய்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai