சுடச்சுட

    

    திருச்சி - காரைக்கால்ரயில் பெட்டிகளில் மின் விளக்கின்றி பயணிகள் அவதி

    By திருவாரூர்,  |   Published on : 03rd April 2015 04:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்சி - காரைக்கால் பயணிகள் ரயிலில் இரு பெட்டிகளில் மின் விளக்குகள், மின் விசிறிகள் இயங்காததால் வியாழக்கிழமை பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

    திருச்சியிலிருந்து காரைக்கால் செல்லும் பயணிகள் ரயில் வியாழக்கிழமை இரவு 7.30 மணிக்கு திருவாரூர் ரயில் நிலையம் வந்தது. ரயில் என்ஜினை ஒட்டியிருந்த இரு பயணிகள் ரயில் பெட்டிகளில் மின் விளக்குகள் எரியவில்லை. மின் விசிறிகளும் இயங்கவில்லை. இதனால், பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

    அவர்களில் சிலரிடம் விசாரித்தபோது, தஞ்சாவூரில் இருந்தே மின் விளக்குகள், மின் விசிறிகள் இயங்கவில்லை. இதுகுறித்து ரயில் ஓட்டுநரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்றனர். இருப்பினும், திருவாரூரிலும் மின்சாரக் கருவிகளின் பழுது நீக்கப்படாமலேயே இரவு 7.40 மணிக்கு ரயில் புறப்பட்டுச் சென்றது.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai