Enable Javscript for better performance
லாட்டரி, புதுப்பட சிடி விற்ற இருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூரில் புதன்கிழமை தடை செய்யப்பட்ட லாட்டரி மற்றும் சினிமா புதுப்பட சிடி விற்ற இருவரை போலீஸார் கைது செய்தனர்.

    திருவாரூர் நகர் கடைகளில் அரசு அனுமதியின்றி புதுப்படங்களின் திருட்டு சிடிக்கள் விற்பனை செய்யப்படுவதாக திருவாரூர் நகர காவல் நிலையத்துக்கு கிடைத்த தகவலின் பேரில், ஆய்வாளர் ராஜா தலைமையில் போலீஸார் பேருந்து நிலையப் பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர்.

    அப்போது, ஒரு கடையில் உரிய அனுமதியின்றி புதுப்பட திருட்டு சிடிக்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதையடுத்து விற்பனைக்கு வைத்திருந்த மகாபலிபுரம், காக்கி சட்டை, கதம் கதம், என்வழி தனிவழி, இவனுக்கு தண்ணீல கண்டம் உள்ளிட்ட 32 புதுப்பட சிடிக்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒட்டக்குடி குளிக்கரையைச் சேர்ந்த ஜான் (42) என்பவர் கைது செய்யப்பட்டார்.

    இதேபோல், திருவாரூர் நகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த திருவாரூர் ஐ.பி. கோயில் தெருவைச் சேர்ந்த பன்னீர்தாஸ் (42) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai