சுடச்சுட

    

    வேதாரண்யம் அருகே வெறிநாய் கடிக்கு சிறுவன் உள்பட மேலும் 9 பேர் பாதிப்பு

    By வேதாரண்யம்  |   Published on : 03rd April 2015 04:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே தகட்டூர் ஊராட்சியில் சுற்றித் திரிந்த வெறிநாய் புதன்கிழமை 9 பேரை கடித்த நிலையில், மற்றொரு வெறிநாய் 4 வயது சிறுவன் உள்பட 9 பேரை வியாழக்கிழமை கடித்துக் குதறியது.

    தகட்டூர் ஊராட்சியில் சுற்றித் திரிந்த வெறிநாய் ஒன்று புதன்கிழமை 9 பேரை கடித்தது. இதில் சூரியங்காடு பகுதி பள்ளி மாணவி சுஸ்மாகனி (15), சுப்பிரமணியன்காடு ரா. செகதாம்பாள் (60), சு. மஞ்சுளா (30) ஆகியோர் தஞ்சாவூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதையடுத்து, பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், தகட்டூர் - தாணிக்கோட்டகம் பகுதியான வெள்ளிக்கிடங்கு சாலையில் பேருந்துக்காக காத்திருந்த 9 பேரை மேலும் ஒரு வெறிநாய் வியாழக்கிழமை கடித்துக் குதறியது. இதில் 4 வயது சிறுவன் வீரசேகரன் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

    மேலும், மணிவண்ணன் (22), திரிஷா (12), பழனிவேல் (54), சண்முகவேல் (5), பூங்குழலி (45) மற்றும் திருத்துறைப்பூண்டி சரவணன் உள்பட 8 பேர் திருத்துறைப்பூண்டி, வாய்மேடு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். 10-க்கும் மேற்பட்ட கால்நடைகளை கடித்த அந்த வெறிநாயை பொதுமக்கள் அடித்துக் கொன்றனர்.

    தொடர்ச்சியாக, வெறிநாய் கடித்துக் குதறும் சம்பவம் தகட்டூர் பகுதி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

     

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai