சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை ஆம்னி வேன் மரத்தில் மோதிய விபத்தில் 8 பேர் காயமடைந்தனர்.

    திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சரோஜா (65), இவரது மகள் செல்வி (45), சரோஜாவின் மருமகள் பத்மாவதி (34), ஹரி (34) தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் ஊழியர். அவரது மனைவி இந்திரா (28), சின்னப்பா (38), காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரைச் சேர்ந்தவர் தினேஷ் (25) இவர்கள் 7 பேரும் திருக்கடையூர் கோயிலுக்குச் செல்ல ஆம்னி வேன் ஒன்றில் வியாழக்கிழமை இரவு புறப்பட்டனர். வேன் ஓட்டுநர் துறையூரைச் சேர்ந்த பாபுராஜ் (30).

    வேன் நீடாமங்கலம் அருகேயுள்ள கொண்டியாறு பாலம் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை வந்தபோது சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது. இதில் வேனின் முன்புறம் சேதமடைந்தது. விபத்தில் வேன் ஓட்டுநர் உள்பட 8 பேரும் காயமடைந்தனர்.

    நீடாமங்கலம் போலீஸார் காயமடைந்தவர்கள் தஞ்சாவூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    வேன் ஓட்டுநர் பாபுராஜ், தினேஷ், சின்னப்பா மூன்று பேரும் பலத்த காயமடைந்ததால் உள்நோயாளியாகவும், மற்ற ஐந்து பேரும் புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்றனர். விபத்து குறித்து நீடாமங்கலம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai