சுடச்சுட

    

    கர்நாடக அரசின் பட்ஜெட் நகல் எரிப்பு: 160 பேர் கைது

    By திருவாரூர்,  |   Published on : 05th April 2015 01:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகை, திருவாரூரில் கர்நாடக அரசின் நிதிநிலை அறிக்கை நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட 160 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

    மேக்கேதாட்டுவில் அணை கட்டும் திட்டத்துக்குத் தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடுத்த வழக்கு விசாரணையில் உள்ள நிலையிலும், மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் பெறாமலும், மேக்கேத்தாட்டு அணை கட்டும் திட்டத்தைக் கர்நாடக அரசு தனது நிதிநிலை அறிக்கையில் சேர்த்துள்ளது.

    இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முதல் கட்டமாக ரூ. 25 கோடி வரவு செலவு அறிக்கையில் ஒதுக்கியுள்ளது. இதை கண்டித்து, நாகை, திருவாரூரில் காவிரி உரிமை மீட்புக் குழு, விவசாயிகள் சங்கம் சார்பில் சனிக்கிழமை போராட்டம் நடைபெற்றது.

    திருவாரூரில்....தலைமை அஞ்சல் நிலையம் முன்பு விவசாயிகள் சங்க நிர்வாகி மு. சேரன் தலைமையில் கூடிய விவசாயிகள், கர்நாடக நிதிநிலை அறிக்கை நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட் டதாக காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன், கலைச்செல்வன் மற்றும் பல்வேறு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் அமைப்பினர் உள்ளிட்ட 109 பேரை போலீஸார் கைது செய்தனர்.

    நாகையில்... நாகப்பட்டினம் அவுரித்திடலில் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், கர்நாடக அரசின் நிதிநிலை அறிக்கை நகலை எரிக்க முயன்ற விவசாயிகள் 51 பேர் கைது செய்யப்பட்டனர்.

    போராட்டத்துக்கு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் தனபாலன் தலைமை வகித்தார். இதில் மீத்தேன் எதிர்ப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், சமூக ஆர்வலர் சோமு இளங்கோ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai