815 பேருக்கு விலையில்லாப் பொருள்கள்
By திருத்துறைப்பூண்டி | Published on : 05th April 2015 01:59 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரெங்கம் கிராமத்தில் சனிக்கிழமை 815 பேருக்கு ரூ. 33,68,395 மதிப்பில் விலையில்லாப் பொருள்களான மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி உள்ளிட்ட பொருள்களை அமைச்சர் ஆர். காமராஜ் வழங்கினார்.
பயனாளிகளுக்கு பொருள்களை வழங்கி அமைச்சர் பேசியது: ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் அதிமுக அரசு பல்வேறு நலத் திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. தவிர, மாணவ, மாணவிகளின் முன்னேற்றத்துக்கும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. மாணவர்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்று தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வதுடன், சமுதாயம் மேம்படவும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார் அவர்.
விழாவுக்கு ஆட்சியர் எம். மதிவாணன் தலைமை வகித்தார். எம்எல்ஏ கே. உலகநாதன் முன்னிலை வகித்தார்.
விழாவில் தஞ்சை மத்திய கூட்டுறவு விற்பனை இணையத் தலைவர் வழக்குரைஞர் ஆர்.கே.பி. விஸ்வநாதன், ஒன்றியக் குழுத் தலைவர் வேதநாயகி, நகர்மன்றத் தலைவர் கே. உமாமகேஸ்வரி, கூட்டுறவு நகர வங்கித் தலைவர் டி.ஜி. சண்முகசுந்தரம், நிலவள வங்கித் தலைவர் சிங்காரவேலு,வட்டாட்சியர் வ. மதியழகன், ஒன்றிய ஆணையர்கள் தமிழ்மணி, அருள்சேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.