சுடச்சுட

  

  எல்ஐசி அலுவலகத்தில் காவலாளியை கட்டிப் போட்டு கொள்ளை முயற்சி

  By திருத்துறைப்பூண்டி  |   Published on : 06th April 2015 01:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி எல்.ஐ.சி. கிளை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காவலாளியைக் கட்டிப் போட்டுவிட்டு, அலுவலகத்தின் பூட்டை உடைத்து கொள்ளை அடிக்க நடைபெற்ற முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனால் அலுவலகத்தில் இருந்த பல லட்சம் ரொக்கம் தப்பியது.

  திருத்துறைப்பூண்டி - திருவாரூர் சாலையில் எல்.ஐ.சி. கிளை அலுவலகம் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது.

  இந்த அலுவலகத்தில் இரவு காவலராக மாங்குடி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் (50) என்பவர் பணியாற்றி வருகிறார்.

  ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அலுவலகத்துக்கு வந்த 5 பேர் காவல் பணியில் இருந்த முருகேசனின் கையைக் கட்டிப் போட்டு, வாயில் பிளாஸ்திரியை ஒட்டிவிட்டு, அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.

  ஆனால், அங்கிருந்த பெட்டகத்தை உடைக்க முடியாததால், கொள்ளை முயற்சியை கைவிட்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

  கைகள் கட்டப்பட்ட நிலையில் முருகேசன் கிடப்பதை கண்ட அலுவலகத்தின் அருகில் உள்ளவர்கள் அவரை திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

  பின்னர் தீவிர சிகிச்சைக்காக முருகேசன் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

  திருவாரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் த. ஜெயசந்திரன், திருத்துறைப்பூண்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் கண்ணதாசன் ஆகியோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டனர்.

  தொடர்ந்து, அரசு விடுமுறையாக இருந்ததால், பாலிசிதாரர்களிடம் வசூலிக்கப்பட்ட தொகை வங்கியில் செலுத்தப்படாமல் அலுவலக பெட்டகத்தில் வைக்கப்பட்டிருக்கலாம் என நினைத்து இந்த கொள்ளை முயற்சி நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai