சுடச்சுட

  

  தமிழகத்தில்பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தல்

  By திருவாரூர்,  |   Published on : 06th April 2015 12:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டுமென தேசிய மகாத்மா காந்தி இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

  திருவாரூரில் அண்மையில் நடைபெற்ற தேசிய மகாத்மா காந்தி இயக்கத்தின் அறிமுக விழாவில் இதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழக கட்டட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துதல், கிராமங்கள்தோறும் மகாத்மா காந்தியின் கொள்கையான சமத்துவ சமுதாயத்தையும், கிராம ராஜ்ஜியத்தையும் உருவாக்க பாடுபடுவது, காவிரியில் கர்நாடகம் அணைக் கட்டுவதை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  மாநிலத் துணைத் தலைவர் சக்தி செல்வகணபதி தலைமையில் நடைபெற்ற விழாவில், மாநில பொதுச் செயலர் ராஜராஜன், மாநில மண்டல ஒருங்கிணைப்பாளர் நிக்கோலஸ், மாநில மனிதவள மேம்பாட்டு பிரிவுத் தலைவர் நரசிம்மன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai