சுடச்சுட

    

    நரிக்குறவர்களுக்கு ரூ. 2.20 லட்சம் வங்கிக் கடன்

    By திருவாரூர்,  |   Published on : 07th April 2015 05:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க் கூட்டத்தில் நரிக்குறவர்களுக்கு ரூ. 2.20 லட்சம் வங்கிக் கடன் வழங்கப்பட்டது.

    ஆட்சியரகத்தில் ஆட்சியர் எம். மதிவாணன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து 162 பேர் மனு அளித்தனர்.

    அப்போது, திருத்துறைப்பூண்டி கூட்டுறவு நகர வங்கியின் மூலம் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த 22 பேருக்கு மொத்தம் ரூ. 2.20 லட்சம் கடன் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு 32 நரிக்குறவர்களுக்கு வழங்கப்பட்ட வங்கிக் கடன் தொகை முறையாக திரும்ப செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் த. மோகன்ராஜ், தனித்துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) லெ. விஜயலட்சுமி, துணை ஆட்சியர் விஜயலட்சுமி (கலால்) கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் என். நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai