சுடச்சுட

  

  திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் ரூ. 16.11 கோடியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் செவ்வாய்க்கிழமை ஆய்வுசெய்தார்.

  திருத்துறைப்பூண்டி ஒன்றியம் கச்சனம், திருவலஞ்சுலி, வரம்பியம், பாமணி, சேகல், நெடும்பலம் உள்ளிட்ட பகுதிகளில் ராஜீவ் காந்தி பிரதான் சதாக் யோஜன திட்டம்,

  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதித் திட்டம், முதலமைச்சரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீட்டின் கட்டுமான பணி, பிரதமரின் கிராம சான்சத் யோஜன

  திட்டம், ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டம் என பல்வேறு திட்டத்தில் சாலைகள் அமைத்தல், புதிய கட்டடம் கட்டுதல் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகள் ரூ.

  16.11 கோடியில் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர், அனைத்துப் பணிகளையும் குறித்த காலத்தில் செய்து முடிக்க உத்தரவிட்டார்.

  ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மோகன்ராஜ், செயற்பொறியாளர் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்சேகரன்

  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai