சுடச்சுட

    

    திருவாரூர் கட்டட விபத்து: நீதி விசாரணை கோரி ஆர்ப்பாட்டம்

    By DN  |   Published on : 08th April 2015 01:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த கட்டுமான விபத்துக் குறித்து நீதிவிசாரணை நடத்தக் கோரி செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில், பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மத்திய பல்கலைக்கழகக்

    கட்டட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தகுதிக்கேற்ப பல்கலைக்கழகத்தில் அரசுப் பணி வழங்க வேண்டும், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 10

    லட்சம் நிதி வழங்க வேண்டும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 2 லட்சம் வழங்க வேண்டும், மத்திய பல்கலைக்கழக நிர்வாக சீர்கேட்டை தடுக்க வேண்டும், காலியாகவுள்ள

    துணைவேந்தர், பதிவாளர், பேராசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    இளைஞர் பெருமன்ற மாவட்டத் தலைவர் முகமது ஹசன்பசரி, மாணவர் பெருமன்ற மாவட்டத் தலைவர் மகாவிக்னேஷ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற

    ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் மாநில துணைச் செயலர் துரை. அருள்ராஜன், நிர்வாகிகள் சுஜாதா, பாலமுருகன், கு. ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai