சுடச்சுட

    

    ரயில்வே இரும்பு பொருள்கள் திருடிய 3 பேர் கைது

    By திருவாரூர்  |   Published on : 08th April 2015 02:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர், ஏப். 7: திருவாரூரில் ரயில்வே இரும்புப் பொருள்களை திருடிச் சென்ற மூவரை போலீஸார் திங்கள்கிழமை இரவு கைது செய்து வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

    திருவாரூர் நகரில் சிறப்பு உதவி ஆய்வாளர் பாலசங்கரன் வாழவாய்க்கால் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு சோதனையில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது சந்தேகப்படும் வகையில் வந்த ஒரு மினி வேனை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் ரூ. 30,000 மதிப்புள்ள ரயில்வே துறைக்குச் சொந்தமான இரும்புப்

    பொருள்கள் இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து, திருவாரூர் ரயில்வே துறைக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, ரயில்வே ஆய்வாளர் தினகரன் தலைமையில் விசாரணை நடைபெற்றது.

    இதில், திருச்சி அருகே அரியமங்கலத்தில் ரயில்வே துறையினரால் பிரித்து வைக்கப்பட்ட இரும்புப் பொருட்கள் அவை என்பதும், காரைக்காலில் விற்பதற்காக

    திருடிச்செல்லப்பட்டது என்பதும் தெரியவந்தது.

    இதுதொடர்பாக அரியமங்கலம் அய்யாகண்ணு மகன் சரவணன் (25), ஸ்ரீரங்கம் பழனி மகன் முரளி (29), நாகராஜ் மகன் மனோகர் (22) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

    கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினி வேன் பறிமுதல் செய்யப்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai