Enable Javscript for better performance
போலீஸ் விசாரணைக்குப் பிறகு மீண்டும் சிறையிலடைப்பு- Dinamani

சுடச்சுட

    

    போலீஸ் விசாரணைக்குப் பிறகு மீண்டும் சிறையிலடைப்பு

    By திருவாரூர்,  |   Published on : 09th April 2015 04:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழக கட்டட விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேரும் போலீஸ் விசாரணைக்குப் பிறகு புதன்கிழமை மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    திருவாரூர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக குடியிருப்பு வளாகத்தில் கட்டப்பட்டு வந்த விருந்தினர் மாளிகையின் முகப்புப் பகுதி கடந்த 29-ம் தேதி இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். 16 பேர் காயமடைந்தனர்.

    இந்த விபத்து தொடர்பாக கட்டட மேலாளர் ஆனந்த், களப் பொறியாளர் அந்தோனி அமல் பிரபு, ஒப்பந்ததாரர் சதீஸ்குமார், மேற்பார்வையாளர் அய்யனார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இவர்கள் 4 பேரையும் நன்னிலம் போலீஸார் காவலில் எடுத்து விசாரிக்க, நன்னிலம் நீதிமன்றம் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து 4 பேரையும் கடந்த 6-ம் தேதி இரண்டு நாள் காவலில் எடுத்து டி.எஸ்.பி. குணசேகரன், ஆய்வாளர் பெரியசாமி ஆகியோர் விசாரித்தனர்.

    விசாரணையில், கட்டுமானம் சரிந்து விழுந்தற்கான காரணம், கட்டுமானத்துக்கான கலவை(சிமென்ட், ஜல்லிக் கற்கள்) சரியாக போடப்பட்டதா, விரைவில் பணிகளை முடிக்க யாரேனும் நிர்பந்தித்தார்களா என்ற கோணத்தில் பல்வேறு கேள்விகளை கேட்டதாகவும், விசாரணை அறிக்கையை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி அடுத்தக் கட்ட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகக் கூறப்படுகிறது.

    இந்நிலையில், விசாரணையை முடித்த போலீஸார் கைதான 4 பேரையும் மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai