சுடச்சுட

    

    மத்திய பல்கலை. கட்டட விபத்து, நிதி, நிர்வாகம் குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும்

    By திருவாரூர்,  |   Published on : 09th April 2015 04:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மத்திய பல்கலைக்கழக கட்டட விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் சிபிஐ, பல்கலை.யின் நிதி, நிர்வாகம் குறித்தும் முழுமையாக விசாரிக்க வேண்டும் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன்.

    திருவாரூர் மத்திய பல்கலைக்கழக குடியிருப்பு வளாகத்தில் கட்டப்பட்டு வரும் விருந்தினர் மாளிகையின் முகப்பு வளைவு இடிந்து விழுந்து 5 பேர் உயிரிழந்தனர், 16 பேர் காயமடைந்தனர். சம்பவம் நடைபெற்ற இடத்தை புதன்கிழமை பார்வையிட்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

    சென்னை மௌலிவாக்கத்தில் பல மாதங்களுக்கு முன்னர் அடுக்குமாடி கட்டட விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழந்த விபத்து கசப்பான அனுபவத்தை கொடுத்தது. கட்டுமானப் பணியின் கட்டமைப்பு குறைப்பாடே மௌலிவாக்கம் விபத்துக்குக் காரணம். இந்த விபத்தை கட்டுமானப் பணியில் ஈடுபடுவோர் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. அந்த வகையில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக கட்டட விபத்தையும் கணக்கில் கொள்ளலாம். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

    ஏற்கெனவே பல்கலைக்கழகம் மீது நிதி, நிர்வாகம் உள்ளிட்டவை குறித்து பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. கட்டட விபத்து, நிதி மற்றும் பல்கலைக்கழக ஒட்டுமொத்த நிர்வாகம் குறித்து சிபிஐ முழுமையாக விசாரித்து உண்மை நிலையை வெளிக் கொண்டு வரவேண்டும்.

    ஆந்திரத்தில் 20 ஏழை தமிழக தொழிலாளர்கள் செம்மரக் கடத்தில் ஈடுபட்டதாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதன் பின்னணியிலுள்ள மாபியாக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    ஆந்திரத்தில் ஏழை தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உயிரிழந்தவர்களுக்கு ஆந்திர மாநில அரசு உரிய இழப்பீடு கொடுக்க வேண்டும் என்றார் ராமகிருஷ்ணன்.

    பேட்டியின்போது கீழ்வேளூர் சட்டப்பேரவை உறுப்பினர் நாகை மாலி, கட்சியின் மாவட்டச் செயலர் நாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai