சுடச்சுட

  

  திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் புதன்கிழமை மின்னல் தாக்கி இளைஞர் உயிரிழந்தார்.

  திருவாரூர் மாவட்டத்தில் புதன்கிழமை பரவலாக மழை பெய்தது. இதில் கொராடாச்சேரி அருகே கரையாபாலையூரைச் சேர்ந்த நடராஜன் மகன் கூலித் தொழிலாளியான சரவணன் (27) வயலில் பயறு செடிகள் எடுத்து கொண்டிருந்தார். அப்போது திடீரென பெய்த மழையின்போது ஏற்பட்ட மின்னல் தாக்கி உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த கொரடாச்சேரி காவல் நிலையப் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரித்து

  வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai