Enable Javscript for better performance
ரயில்வே டிராக்மேன்களுக்கு பதவி உயர்வு கோரி ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ரயில்வே டிராக்மேன்களுக்கு பதவி உயர்வு கோரி ஆர்ப்பாட்டம்

    By திருவாரூர்  |   Published on : 09th April 2015 05:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூரில் புதன்கிழமை ரயில்வே டிராக்மேன்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    திருவாரூர் ரயில் நிலையம் அருகிலுள்ள ரயில்வே பொறியியல் துறை அலுவலகம் முன் என்ஜினியரிங் தொழிலாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், 2012 ஆகஸ்ட் முதல் டிராக்மேன்களுக்கு புதிய விகிதாசாரப்படி பதவி உயர்வு வழங்க வேண்டுமென்று ரயில்வே ஆணையம் உத்தரவு வழங்கி இதுவரை பதவி உயர்வு வழங்காதது கண்டிக்கத்தக்கது.

    டிராக்மேன்களுக்கான மூப்பு பட்டியலை வெளியிட வேண்டும், அனைத்து கேட்லாஜ்களுக்கும் கழிவறை, குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும், டிராக்மென் பிரிவிலுள்ள ஏராளமான காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தென்னக ரயில்வே மஸ்தூர் யூனியன் திருவாரூர் கிளைத் தலைவர் வி. மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், உதவிச் செயலர்கள் துரைசாமி, விழிநாதன் மற்றும் சுரேஷ்குமார், மகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai