சுடச்சுட

    

    திருவாரூரில் 8 குடிசை வீடுகள் எரிந்து சேதம்

    By திருவாரூர்,  |   Published on : 12th April 2015 05:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் நாலுகால் மண்டபம் பகுதியில் சனிக்கிழமை மதியம் 8 குடிசை வீடுகள் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தன.

    திருவாரூர் - மயிலாடுதுறை சாலை நாலுகால் மண்டபம் பகுதியில் குடிசை வீடுகள் அமைத்து மக்கள் வசித்து வருகின்றனர். சனிக்கிழமை பிற்பகல் சாலையோரத்தில் ஒரு வீட்டின் கூரையில் தீப்பற்றியது. அப்பகுதியில் இருந்தவர்கள் கூச்சலிட்டதை தொடர்ந்து, வீட்டினுள் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்தனர்.

    காற்று வேகமாக அடித்ததாலும், வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்ததாலும் தீ மளமளவென பக்கத்துக்கு வீட்டு கூரைகளுக்கும் பற்றியது. தகவலறிந்த திருவாரூர், குடவாசல், நன்னிலம் பகுதியிலிருந்த தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை போராடி அணைத்தனர். இந்த விபத்தில் சுமதி (45), வைரம் (70), ராஜேஸ்வரி (எ) மரகதவள்ளி (50), ராஜேந்திரன் (60), மணிகண்டன் (42), மூர்த்தி (41), கணேசன் (52), பிரபு (28) ஆகிய எட்டு பேரின் வீடுகள் எரிந்து சேதமடைந்தன. மேலும், பல்வேறு வீட்டு உபயோக பொருள்களும் எரிந்து நாசமானது. சேதமடைந்த பொருள்களின் மதிப்பு லட்சக்கணக்கில் இருக்கும் என தெரிகிறது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai