சுடச்சுட

    

    கொள்முதல் நிலையத்தில்நெல் மூட்டைகளை திருடிய 2 பேர் கைது

    By திருவாரூர்,  |   Published on : 14th April 2015 04:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இளவங்கார்குடி பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலிருந்து நெல் மூட்டைகளை திருடிக் கொண்டு தப்பியோடிய 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

    இந்த நிலையத்தில் பெரும்புகளூரைச் சேர்ந்த சேகர் (48) என்பவர் பாதுகாவலராக இருந்து வருகிறார். ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சுமார் 2 மணியளவில் பவித்திரமாணிக்கம் செந்தில் நகரைச் சேர்ந்த சுகுமார் (23), இளவரசன் (27) ஆகிய இருவரும் பயணிகளை ஏற்றி ச் செல்லும் ஆட்டோ மூலம் 40 கிலோ எடையுள்ள 6 மூட்டைகளை திருடிக் கொ ண்டு தப்பியோட முயற்சித்தனர்.

    இதையறிந்த சேகர், அவர்கள் இருவரையும் பிடித்து திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதையடுத்து, சுகுமார், இளவரசன் ஆகிய 2 பேரையும் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai