சுடச்சுட

    

    ஆலங்குடி குருபகவான் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு வழிபாடு

    By DN  |   Published on : 15th April 2015 06:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ்ப் புத்தாண்டையொட்டி, நவக்கிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தக் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி, ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழலி அம்மன், குருபகவான், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.குருபகவானுக்கும், ஏலவார்குழலி அம்மனுக்கும் தங்கக்கவசம் சாத்தப்பட்டது. மாலையில் குத்துவிளக்கு பூஜை, சமய சொற்பொழிவுகள் நடைபெற்றன. புதுவருட பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை அறநிலைய உதவி ஆணையர் மற்றும் கோயில் செயல் அலுவலர் ஆர். சாத்தையா, அறநிலைய உதவி ஆணையர் மற்றும் தக்கார் செ.சிவராம்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai