Enable Javscript for better performance
கணவர் சாவில் சந்தேகம்: மனைவி புகார்- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் அருகே கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக மனைவி அளித்த புகாரின் பேரில், காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    திருவாரூர் அருகே சேந்தமங்கலம் நேரு நகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து (40). இவரது மனைவி வள்ளி (34). இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த இரு நாள்களுக்கு முன்பு தம்பதிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வள்ளி கோபித்துக்கொண்டு திருவாரூரில் உள்ள ஒரு தனியார் காப்பகத்தில் வந்து தங்கியுள்ளார்.

    இதற்கிடையே, மாரிமுத்து வீட்டில் திங்கள்கிழமை உயிரிழந்த கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில், வள்ளி வீட்டுக்குச் சென்று பார்த்துள்ளார். பிறகு, தனது கணவர் மாரிமுத்துவின் சாவில் சந்தேகம் இருப்பதாக திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai