சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையைச் சேர்ந்த இளைஞர் திங்கள்கிழமை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    முத்துப்பேட்டை அருகே செம்படவன்காடு பகுதியைச் சேர்ந்தவர் பரந்தாமன் மகன் கார்த்திகேயன் (30). இவர்மீது முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இந்த நிலையில், கார்த்திகேயன் தொடர்ந்து குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதால், அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் த. ஜெயச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணனுக்கு பரிந்துரை செய்தார்.

    அதன்பேரில், ஆட்சியர் எம். மதிவாணன் கார்த்திகேயனை குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai