சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டத்தில் 70% பேருந்துகள் செவ்வாய்க்கிழமை இயக்கப்பட்டன.

    போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்தனர். அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நன்னிலம் ஆகிய 4 பணிமனைகளில் மொத்தமுள்ள 264 பேருந்துகளில் சுமார் 200-க்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்பட்டன. செவ்வாய்க்கிழமை தமிழ்ப் புத்தாண்டு விடுமுறை என்பதால், கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்கவில்லை. இதனால், மக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை. எனினும், திருத்துறைப்பூண்டி பணிமனையிலுள்ள 63 புறநகர் பேருந்துகளில் 15-க்கும் குறைவான பேருந்துகளே இயக்கப்பட்டதால் மக்கள் பாதிக்கப்பட்டனர். மதியம் 12 மணி நிலவரப்படி 70 சதவீதத்துக்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்பட்டன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai