சுடச்சுட

    

    திருவாரூர் அருகே காரைக்கால் - தஞ்சை பயணிகள் ரயிலில் சக்கரத்தையொட்டிய பிரேக் அமைப்பில் இருந்து புகை வந்ததால், பிரச்னை சரிசெய்யப்பட்டு 20 நிமிடங்கள் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது.

    காரைக்கால் - திருச்சி பயணிகள் ரயில் இரவு 7.35 மணிக்கு திருவாரூரில் இருந்து தஞ்சையை நோக்கி புறப்பட்டது. திருமதிக்குன்னம் ரயில் நிலையத்தில் நின்று ரயில் புறப்பட்டபோது, என்ஜினில் இருந்து இரண்டாவாது பெட்டியில் இருந்து கீழே இறங்கிய பயணிகள் அந்த பெட்டியின் அடியில் ஒரு சக்கரத்தையொட்டியிருந்த பிரேக் அமைப்பிலிருந்து புகை கிளம்பியதைப் பார்த்தனர்.

    இதையடுத்து அவர்கள் எழுப்பிய எச்சரிக்கை ஒலியால், ரயில் பயணிகள் சங்கிலியைப் பிடித்து ரயிலை நிறுத்தினர். பின்னர் திருவாரூரில் இருந்து ரயில்வே ஊழியர்கள் விரைந்து சென்று பழுதாகியிருந்த பிரேக் அமைப்பை சரி செய்த பின் ரயில் 20 நிமிட தாமதத்துக்கு பிறகு ரயில் புறப்பட்டுச் சென்றது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai