சுடச்சுட

  

  திருவாரூர் மாவட்டத்தில் 888 சத்துணவு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாற்று நடவடிக்கை மூலம் மாணவர்களுக்கு உணவு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதுபோல நாகையிலும் சத்துணவு ஊழியர்கள் வேலைநிறுத்தம் மேற்கொண்டனர்.

  சத்துணவு திட்டத்தில் பணியாற்றும் ஊழியாóகள் அனைவருக்கும் ஊதிய குழுவால் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 3,500 வழங்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டுமெùன்றக் கோரிக்கையை வலியுறுத்தி மாணவர்களுக்கு உணவு வழங்காமல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்திருந்தனர்.

  அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் சத்துணவு ஊழியாóகள் புதன்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையொட்டி திருவாரூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர் அமைப்பின் மாவட்ட தலைவாó குமார் தலைமையில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதுமுள்ள 984 சத்துணவு மையங்களில் 125 ஆண்கள் உள்ளிட்ட 2,288 சத்துணவு அமைப்பாளாóகள், உதவியாளாóகள் உள்ளனர். இதில் 888 ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

  இதையடுத்து மாவட்ட நிர்வாகம் மாற்று ஏற்பாடு மூலம் மாணவாóகளுக்கு உணவு வழங்க நடவடிக்கை மேற்கொண்டது.

  நாகையில்... கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகையில் சத்துணவு ஊழியர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai