சுடச்சுட

    

    திருவாரூரில் செவ்வாய்க்கிழமை 26.6 மில்லி மீட்டர் மழை பெய்தது.

    மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் சுட்டெரிக்கும் வெயில் தாக்கம் சற்று குறைந்து, குளிர்ந்த சூழ்நிலை நிலவி வருகிறது. செவ்வாய்க்கிழமை மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் மழைப் பெய்தது. இதனால் பொதுமக்கள், கால்நடை விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.

    மாவட்டத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு மி.மீ. வருமாறு:

    திருவாரூர் - 26.6, பாண்டவையாறு தலைப்பு - 7, முத்துப்பேட்டை - 3.6, திருத்துறைப்பூண்டி - 3.4, மன்னார்குடி - 2, குடவாசல் - 1.8, வலங்கைமான் -1 என்ற அளவில் மழைப் பெய்தது. புதன்கிழமை சிறிது நேரம் மழை பெய்தது, நாள் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai