சுடச்சுட

    

    பிறவி மருந்தீசர் ஆலய சித்திரைத் திருவிழா தொடக்கம்

    By திருத்துறைப்பூண்டி  |   Published on : 16th April 2015 04:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் உள்ள பிறவி மருந்தீசர் கோயில் அசுபதி நட்சத்திர பரிகார தலமாகும்.

    வில்வாரண்யம் என அழைக்கப்படும் இத்தலத்தில் பிறவி மருந்தீசர் மேற்கு நோக்கி காட்சியளிப்பது தனிச் சிறப்பாகும்.

    இளம் பெண்கள் இங்குள்ள மாங்கல்ய தீர்த்தத்தில் நீராடி, பெரியநாயகி அம்பாளை வழிபட்டால் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.

    இந்தக் கோயில் சித்திரைத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஏப். 16, 17-ல் விக்னேஸ்வர உற்சவமும், 18,19-ல் ஸ்ரீ சுப்பிரமணியர் உற்சவமும், 20ம் தேதி அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்க வாசகர் வீதியுலாவும், 21-ல் புஷ்ப விமானத்திலும், 22-ல் புஷ்ப பல்லக்கிலும், 23-ல் வசந்தந் திருவிழாவும் நடைபெறவுள்ளன.

    இந்திர விமானம், பூத வாகனத்திலும், யானை வானத்திலும், 27-ல் வெள்ளி ரிஷப வாகனத்திலும், 29-ல் தீர்த்த விடங்க தியாகராஜர் திருத்தேரிலும், மே 6-ல் ஸ்ரீகல்யாணசுந்ததரர் கோலத்தில் தெப்பத்திலும் எழுந்தருளி அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும், மே 8-ல் சித்திரை திருவிழா நிறைவு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai