Enable Javscript for better performance
சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரதம்- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் மற்றும் நாகப்பட்டினத்தில் வியாழக்கிழமை சத்துணவு ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியர்களாக அறிவித்து, ஊதியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஊதியத்தை வழங்க வேண்டும். பணி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மாதந்தோறும் ரூ. 3,500 ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணி ஓய்வு தொகையை ரூ. 2 லட்சமாக உயர்த்த வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதன்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 2-வது நாளான வியாழக்கிழமை மாவட்டத் தலைநகரில் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவாரூரில்...

    திருவாரூர் ரயில் நிலையம் அருகில் சத்துணவு ஊழியர்கள் சங்க மாநிலச் செயலர் பேயநாதன் தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் செளந்தரராஜன் உள்ளிட்ட 450 பேர் பங்கேற்றனர்.

    நாகையில்...

    நாகை மாவட்ட சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் புதன்கிழமை தொடங்கியது.

    வியாழக்கிழமை கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்க கட்டடம் முன்பு சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ராஜு தலைமை வகித்தார். இதில் மாவட்டச் செயலர் கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் அன்பழகன் உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர். நாகை மாவட்டத்தில் 1140 சத்துணவு மையங்கள் உள்ளன. இதில் 900 மையங்களைச் சேர்ந்த சத்துணவு அமைப்பாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதிலிருந்து சுமார் 1400-க்கும் மேற்பட்டோர் வேலைக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai