Enable Javscript for better performance
திருத்துறைப்பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திருத்துறைப்பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

    By திருத்துறைப்பூண்டி  |   Published on : 17th April 2015 05:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருத்துறைப்பூண்டி நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, நகராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருத்துறைப்பூண்டி நகராட்சியில் உள்ள சிங்களாந்தி சாலையை சீரமைக்க வேண்டும். 17, 18-வது வார்டுகளில் நிலவும் அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி நகரில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் பிரதான சாலையை சிங்களாந்தி சாலை கடந்த ஓராண்டுக்கு முன்பு அமைக்கப்பட்ட நிலையில் குறுகிய காலத்துக்குள்ளாகவே சேதமடைந்துள்ளது. எனவே, இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்துக்கு நிர்வாகிகள் வி. திராவிடமணி, வி. கணேசன் ஆகியோர் தலைமை வகித்தனர். நகரக் குழு நிர்வாகிகள் ஆர்.எம். சுப்பிரமணியன், கே. கோபு, தண்டபாணி எம். ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்டக் குழு உறுப்பினர்கள் டி. சுப்பிரமணியன், எம்.பி.கே. பாண்டியன், நகரச் செயலர் எஸ். சாமிநாதன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai