சுடச்சுட

  

  பாதுகாப்பு சேவை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற இலவச பயிற்சி

  By திருவாரூர் / நாகப்பட்டினம்,  |   Published on : 17th April 2015 05:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

   தனியார் துறைகளில் பாதுகாப்பு சேவை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற இலவச திறன் எய்தும் பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெற திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தினர் விண்ணப்பிக்கலாம்.

  இதுகுறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன், நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி ஆகியோர் தனித்தனியே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  தமிழக அரசு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் இளைஞர்கள் தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறும் வகையில் பாதுகாப்பு சேவை பணிகள் குறித்து 21 நாள்கள் திறன் எய்தும் பயிற்சியை தமிழ்நாடு காவல்துறையுடன் இணைந்து வழங்குகிறது.

  இந்த பயிற்சி திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை ஆயுதப்படை மைதானங்களில் 21 நாள்கள் தினமும் காலை 9.00 முதல் மாலை 5.30 வரை இலவசமாக நடத்தப்படுகிறது.

  பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் பயிற்சி நாள்களில் தேநீர், மதிய உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும். குறைந்தபட்சமாக 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நல்ல உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். 18 வயது முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். பயிற்சி பெற விருப்பமுள்ள இளைஞர்கள் அசல் கல்விச் சான்றிதழ், சாதி சான்றிதழ், இருப்பிட முகவரி சான்றிதழ், குடும்ப அடையாள அட்டை அசல், 3 புகைப்படங்கள் உள்ளிட்டவைகளுடன் பயிற்சி நிலையத்தில் அளிக்கப்படும் விண்ணப்பதை பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.

  எனவே, விருப்பமுள்ள இளைஞர்கள் ஏப். 20, 21 ஆகிய தேதிகளில் திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட ஆயுதப்படை பயிற்சி மைதானங்களில் உள்ள காவல்துறையை அணுகி பயன்பெறலாம்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai