கல்லூரி விடுதிகளில் ஆய்வு
By திருவாரூர் | Published on : 18th April 2015 05:26 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருவாரூர் அருகே கிடாரங்கொண்டானிலுள்ள கல்லூரி மாணவிகளுக்கான ஆதிதிராவிடர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் விடுதியில் வெள்ளிக்கிழமை ஆட்சியர் எம். மதிவாணன் ஆய்வு மேற்கொண்டார்.
விடுதியில் கழிவறை, குடிநீர் வசதி, சமையலறை, மாணவிகளின் அறைகளில் மின்சார விளக்குகள் சரியாக உள்ளதா என்பதை ஆய்வு மேற்கொணடு, மாணவிகளுக்காக தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிட்டு தரத்தை ஆய்வு செய்தார். தொடர்ந்து மாணவிகளிடம் விடுதிகளிலுள்ள குறைபாடுகள், தேவைகள் என்ன என்பதை கேட்டு அறிந்தார். கல்வியில் கவனம் சிதறாமல் படித்து, பொது அறிவு புத்தகங்களை நிறைவான ஈடுபாட்டுடன் படித்து முன்னேற்றம் காண வேண்டுமென மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்.