சுடச்சுட

  

  குடவாசல் அருகே சாலை விபத்தில் முதியவர் சாவு

  By திருவாரூர்,  |   Published on : 18th April 2015 05:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூர் மாவட்டம், குடவாசலில் வியாழக்கிழமை இரு சக்கர வாகனம் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.

  குடவாசல் அருகேயுள்ள புதுக்குடி சமத்துவப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சிதம்பரம் (65). இவர் காப்ணாமங்கலம் எண்கன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே வந்த திருச்சேறை முருகேசன் (54) என்பவர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் சிதம்பரம் மீது மோதியது.

  இதில் காயமடைந்த சிதம்பரம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உயிரிழந்தார். குடவாசல் போலீஸார் தப்பியோடிய முருகேசனை தேடி வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai