சுடச்சுட

    

    நெல்லை மாவட்டம், நான்குநேரி அருகேயுள்ள காட்டமனேரியைச் சேர்ந்தவர் அய்யனார் மகன் காளிதாஸ் என்கிற ராஜா (26). திருவாரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு கடையில் நிகழ்ந்த திருட்டு சம்பவத்தில் தொடர்புள்ளதாக ராஜாவை காவல்துறையினர் கைது செய்து, விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், ராஜா பல்வேறு இடங்களில் கடைகளின் பூட்டை உடைத்து திருடியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் த. ஜெயச்சந்திரன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன், ராஜாவை குண்டர் சட்டத்தின்கீழ் சனிக்கிழமை கைது செய்ய உத்தரவிட்டார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai