சுடச்சுட

    

    தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை தேவை

    By திருவாரூர்,  |   Published on : 19th April 2015 05:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டத்தில் கோடைகாலத்தில் மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடின்றி விநியோகம் செய்ய ஊராட்சித் தலைவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.

    திருவாரூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குடிநீர்ப் பற்றாக்குறையை சரி செய்ய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான கூட்டத்தில் மேலும் அவர் பேசியது: கோடைகாலத்தில் மக்களின் அடிப்படைத் தேவைகளின் ஒன்றான பாதுகாக்கப்பட்ட குடிநீரை மக்களுக்கு தேவைக்கேற்ப வழங்க அனைத்து ஊராட்சித் தலைவர்களும் நடவடிக்கை மேற்கொண்டு, அனைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து குடிநீர் விநியோகம் செய்வதை முறைப்படுத்த வேண்டும்.

    மேலும் மேல்நிலை மற்றும் நிலத்தடி நீர்தேக்கத் தொட்டிகளை பிளிச்சிங் பவுடாó கொண்டு மாதம் இரு முறை கட்டாயம் சுத்தம் செய்ய வேண்டும். நீரேற்றும் மற்றும் விநியோகக் குழாய்கள், வாழ்வுகள் போன்றவற்றில் கசிவு இருப்பின் உடனடியாக சரி செய்து, நீராதாரங்கள் அருகிலும், ஆறு, ஏரி, கண்மாய் குளங்கள், கிணறுகள், நிலத்தடி மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அருகில் மனித மற்றும் மிருகக் கழிவுகளால் நீர் மாசுப்படாமல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றார் மதிவாணன்.

    கூட்டத்தில் திட்ட இயக்குநாó (மாவட்ட ஊரக வளாóச்சி முகமை) த. மோகன்ராஜ், தமிழ்நா டு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் லேகா தமிழ்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai