சுடச்சுட

  

  திருவாரூர் மத்தியப் பல்கலை.யில் சேர ஜூன் 6-ல் நுழைவுத் தேர்வு

  By திருவாரூர்  |   Published on : 19th April 2015 05:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் 2015-ம் கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன் 6,7-ம் தேதிகளில் நுழைவுத் தேர்வு நடைபெறவுள்ளது.

  இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளர் பொன். ரவீந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

  தமிழகம், கேரளம், ஜார்க்கண்ட், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் செயல்படும் 8 மத்திய பல்கலைக்கழகங்கள் இணைந்து, இந்த பொது நுழைவுத் தேர்வை நடத்துகின்றன. ஜூன் 6,7 -ல் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருவாரூர் உள்ளிட்ட இந்தியாவில் 39 மையங்களில் பொது நுழைவுத் தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கு மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மே 5-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். விண்ணப்பிப்பவர்கள் தங்களின் மின்னஞ்சல் முகவரி, ஸ்கேன் செய்த புகைப்படம் மற்றும் கையெழுத்து, மாணவரின் மதிப்பெண் விழுக்காடு ஆகியவற்றை இணையத்தில் விண்ணப்பிக்கும் போது அளிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணத்தை இணையதளம் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.

  திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் பிளஸ் 2 முடித்தவர்கள் ஒருங்கிணைந்த 5 ஆண்டு படிப்பு எம்எஸ்சி இயற்பியல், வேதியியல், கணிதம், பொருளாதாரம், வாழ்க்கை அறிவியல் பாட பிரிவுகளிலும், இளநிலை முடித்தவர்கள் முதுநிலை ஆங்கிலம், செம்மொழி தமிழ், ஹிந்தி, சமூகப் பணி, ஊடகம் மற்றும் தொடர்பியல் பாடப் பிரிவுகளிலும் சேரலாம். நிகழாண்டு எம்.டெக் மெட்டீரியல் அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்பம், எனர்ஜி மற்றும் சுற்றுச்சூழல் தொழில்நுட்பப் படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் விவரங்களை என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். அல்லது பல்கலைக்கழக துணைப் பதிவாளரை 04366-277261, 9489054270 தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai