சுடச்சுட

  

   திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே வையகளத்தூரில் அண்மையில் பிரதமர் மோடி சமூகச் சேவை மையத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

  நீடாமங்கலம் வட்டம் வையகளத்தூரில் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள சர்

  ஏ.டி. பன்னீர்செல்வம் நகரில், திருவாரூர் பாஜக பிரமுகர் மார்ட்டின் செல்வம் என்பவர் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா அறக்கட்டளை என்ற பெயரில் பிரதமர் மோடி சமூகச் சேவை மையத்தை தொடங்கியுள்ளார்.

  சேவை மையத்தில், வேளாங்கண்ணி பயணிகள் இலவசமாக தங்கி இளைப்பாறி செல்லும் வசதி, ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் இலவச ஆலோசனை திட்டம் மற்றும் கல்வி, முதியோர் இல்லம், எச்.ஐ.வி., புற்றுநோய் மையம் ஆகியவை அடங்கும்.

  முன்னதாக பங்குத் தந்தை ஏ. சேவியர் தலைமையில் நடைபெற்ற ஆண்டவர் திருவிழா மற்றும் சேவை மையத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில், பிலோமினா செல்வம், மாவட்ட பாஜக நிர்வாகி எஸ். என். சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai