சுடச்சுட

    

    ஆசிரியர் தகுதித் தேர்வை நீக்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 15 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் சங்கங்களின் ஜாக்டோ அமைப்பினர் கரூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளி முன் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    உயர்நிலை-மேல்நிலை பள்ளி தொடர்பாளர் இரா. ராஜேந்திரன், தொடக்கநிலை தொடர்பாளர் சு. வேலுமணி ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில துணைச் செயலர் ப. வையாபுரி உண்ணாவிரதத்தை தொடக்கிவைத்துப் பேசினார்.

    மாலையில் தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் பொன். செல்வராஜ் உண்ணாவிரதத்தை முடித்து வைத்து பேசுகையில், தமிழ்நாடு கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான பணியில் அண்மை காலமாக சமூக விரோதிகளின் தலையீடும், ஆசிரியர்களின் பணிக்கு பாதுகாப்பின்மையும் ஒரு தொடர் நிகழ்வாக உள்ளது. இதன்காரணமாக ஆசிரியர்கள் பள்ளிகளில் மனநிறைவுடன் கற்றல், கற்பித்தல் பணியில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு தமிழகத்தில் பணியாற்றும் மருத்துவர்களின் பணிப் பாதுகாப்புக்கு பாதுகாப்புச்சட்டம் இயற்றியது போல ஆசிரியர்களின் பாதுகாப்பிற்கும் தனி பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும். அரசு நிதியுதவி பெறும்பள்ளிகளில் எவ்வித பதவி உயர்வும் இன்றி 30 ஆண்டுகள் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலைகளுக்கு வழங்குவதைப்போன்று 6 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.

    மாணவர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு தொடக்கப்பள்ளிகளை மூடுவதைக் கைவிட்டு அனைத்துப்பள்ளிகளும் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வை நீக்கி, பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைக்கல்வி வரை தாய்மொழியாக தமிழ் வழிக்கல்வியை நடைமுறைப்படுத்திட வேண்டும்.

    தேர்வுநிலை, சிறப்பு நிலைக்குத் தனித்தனியாக ஊதிய விகிதமும், தர ஊதியமும் நிர்ணயம் செய்திட வேண்டும்.

    2011-தேர்தலில் வாக்குறுதி அளித்ததற்கு ஏற்ப தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.

    முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநிலப் பொருளாளர் கிóருஷ்ணன் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கழகம், முதுநிலை, பட்டதாரி ஆசிரியர் கழகம் உள்ளிட்ட ஜாக்டோ அமைப்பினர் திரளாக பங்கேற்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai