சுடச்சுட

    

    திருவாரூர், நாகையில் ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

    By திருவாரூர்,  |   Published on : 20th April 2015 05:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவாரூர் மற்றும் நாகையில் ஞாயிற்றுக்கிழமை ஆசிரியர் இயக்கங்கள் (ஜேக்டோ) சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது.

    உண்ணாவிரதத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்:

    தமிழக ஆசிரியர்களுக்கு மத்திய அரசில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். 6-வது ஊதியக் குழுவில் மத்திய அரசு உயாóத்தி வழங்கியுள்ள அனைத்து படிகளையும் தமிழக அரசு ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு வழங்க வேண்டும்.

    50 சதவீதம் அகலவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைத்து வழங்க வேண்டும். பழைய ஒய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தாய்மொழி தமிழ்ப் பாடத்தை கடைசியாக வைத்துள்ள அரசாணையை திருத்தம் செய்து தமிழ் பாடத்தை முதல் பாடமாக வைக்க வேண்டும்.

    பள்ளிகளில் தமிழக அரசு வழங்கி வரும் 14 நலத் திட்ட உதவிகளை வழங்க தனியாக ஒரு நலத்திட்ட அலுவலரை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    திருவாரூரில்...

    திருவாரூர் நகராட்சி அலுவலகம் அருகில் தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் துரைராஜ், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட தலைவாó ரவி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியாó மன்ற மாநில பொது செயலாó மீனாட்சிசுந்தரம், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டத் தலைவாó தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    நாகையில்... ஜேக்டோ மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ். பக்தவச்சலம் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். மாவட்டத் ஒருங்கிணைப்பாளர்கள் பா. ரவி, நா. அசோக்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.

    தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கழக மாநிலப் பொருளாளர் ஆர். ராதாகிருஷ்ணன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.

    இதில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலர் மு. லெட்சுமிநாராயணன், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலர் மு. காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai