சுடச்சுட

  

  சத்துணவு ஊழியர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, திருவாரூர், திருத்துறைப்பூண்டியில் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  ஊதிய உயர்வு, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவுப் பணியாளர்கள் கடந்த புதன்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும், அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் திருவாரூர், திருத்துறைப்பூண்டியில் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூரில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சங்கத்தின் மாவட்டத் தலைவர் சௌந்தரராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  சத்துணவு ஊழியாóகளின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் ஏப். 22-ல் மாவட்ட அளவில் உண்ணாவிரதம், ஏப். 27-ல் சென்னையில் 1 லட்சம் ஊழியாóகள் பேரணியாக சென்று முதல்வரை சந்திக்கவுள்ளதாக அரசு ஊழியர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

  திருத்துறைப்பூண்டியில்....வட்டாட்சியர் அலுவலகம் எதிரே சங்கத்தின் வட்டச் செயலர் டி. மணிவண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்ட இணைச் செயலர்கள் தருமையன், குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சத்துணவு ஊழியர் சங்க வட்டத் தலைவர் பாலசுப்பிரமணியன், வட்ட செயலர் ஜெகஜோதி, வட்ட பொருளாளர் ராமசாமி, வருவாய்த் துறை அலுவலர் சங்க வட்டத் தலைவர் நந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai