சுடச்சுட

  

  "காவிரி: தமிழக அனைத்துக் கட்சி குழுவினர் பிரதமரை சந்திக்க வேண்டும்'

  By திருவாரூர்,  |   Published on : 21st April 2015 04:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காவிரி பிரச்னையில் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சி குழுவினர் பிரதமரை சந்தித்து முறையிட வேண்டும் என்றார் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் கோ.க. மணி.

  அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் மே 17-ம் தேதி பாமக சார்பில் சோழமண்டல மாநாடு நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திருவாரூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.

  கூட்டத்தில் கட்சியின் மாநிலத் தலைவர் கோ.க.மணி பங்கேற்றார்.

  அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

  தமிழகத்தில் இளைய சமுதாயம் மதுவுக்கு அடிமையாகி சீரழிந்து வருகிறது. எனவே, பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். இதேபோல், தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் நடைபெறும் ஊழலைத் தடுக்க வேண்டும். மே 17-ல் ஜயங்கொண்டத்தில் நடைபெறவுள்ள சோழ மண்டல மாநாடு திருப்புமுனை மாநாடாக அமையும். காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்றுக் குழுவை விரைந்து அமைக்க வேண்டும், கர்நாடகம் காவிரியில் புதிய அணைக் கட்டுவதை தடுக்க வேண்டும். இதுதொடர்பாக, தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி, பிரதமரை சந்திக்க வேண்டும் என்றார் கோ.க. மணி.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai