Enable Javscript for better performance
திருவாரூரில் சங்கீத மும்மூர்த்திகள் ஜயந்தி விழா- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் தியாகராஜர் கோயிலில் ஸ்ரீகாஞ்சி காமகோடிபீட கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் ஜயந்தி விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

    விழாவின் தொடக்கமாக திருப்பாம்புரம் டி.கே.எஸ். மீனாட்சிசுந்தரம், சேஷகோபாலன் குழுவினரின் நாகசுரம், நித்யஸ்ரீமகாதேவன் குழந்தைகள் தேஜாஸ்ரீ, தனுஸ்ரீ

    ஆகியோரின் பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவுக்கு மடிப்பாக்கம் சுவாமிநாதன் தலைமை வகித்தார். திருவாரூர் சுகாதார துணை இயக்குநர் சுமதி விழாவை தொடக்கி வைத்தார். பொதுச் செயலர் பக்தவத்சலம்,

    துணைத் தலைவர் கனகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில், நித்யஸ்ரீமகாதேவனுக்கு சேவாபூசன் விருது வழங்கப்பட்டது. வரும் 26-ம் தேதி வரை நடைபெறவுள்ள

    இந்த விழாவில் நாள்தோறும் மாலை 6 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி தொடங்கி இரவு 8.30 மணி வரை நடைபெறுகிறது.

    ஏப். 26-ம் தேதி காலை 9 மணிக்கு பஞ்சரத்ன கீர்த்தனைகள் இசைத்து மும்மூர்த்திகளுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai