சுடச்சுட

  

  நன்னிலம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு

  By DN  |   Published on : 22nd April 2015 04:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே வீட்டுக் கதவை உடைத்து 10 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

  நன்னிலம் அருகே அச்சுதமங்கலத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (42). இவர் கடந்த 17-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு

  சென்றார். மீண்டும் திங்கள்கிழமை காலை வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது, வீட்டுக் கதவுகளை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோவில் வைத்திருந்த 10

  பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது.

  இதுகுறித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai